News April 25, 2024
எட்டு வடமாநில வாராந்திர ரயில்கள் ரத்து

திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு காரணமாக கோவை , திருப்பூர் , ஈரோடு வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் எட்டு வாராந்திர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.இந்த ரயில்கள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
Similar News
News January 12, 2026
திருப்பூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

திருப்பூர் மக்களே வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற தங்களது வரி தொடர்பான சேவைகளை இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறலாம். இதற்கு vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவையை பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 98849- 24299 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். (இத்தகவல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)
News January 12, 2026
காங்கேயம் அருகே விபத்து: இளைஞர் பலி

கரூர், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கௌதம்(25). இவர் காங்கேயத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் படும்காயம் அடைந்த கௌதம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 12, 2026
திருப்பூர்: GAS புக் பண்ண புது வழி

திருப்பூர் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். ( இத்தகவலை SHARE பண்ணுங்க)


