News April 25, 2024

அரியலூர்: ஆட்சியர் வேண்டுகோள்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும் கோடைகால நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

அரியலூரில் 600 ஆண்டு பழமையான அரண்மனை

image

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள அரண்மனை 600 ஆண்டுகள் பழமையானதாகும். இது சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 60 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதை கட்டியவர் சின்ன நல்லப்ப உடையவர் என்று கூறுகிறார்கள். இவர் தனது அரண்மனையை கட்டிய பின், அரண்மனையைச் சுற்றி பல கிராமங்களை உருவாக்கி இருக்கிறார் என்றும் அதனாலேயே உடையார்பாளையம் உருவானதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க

News January 21, 2026

அரியலூர்: சிறப்பு பயிற்சி முகாம் அறிவிப்பு

image

அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பிரதான் மந்திரி தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், அப்ரண்டிஸ் மேளா இன்று நடைபெறுகிறது. இதில் அரசு ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐ-யில் படித்த இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில், அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே, இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு திறன் பயிற்சி உதவி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 21, 2026

அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

தஞ்சாவூர், காருகுடியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராவார். இவர் டிச.16-ம் தேதி அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த நபரை தாக்கி, அவரிடம் இருந்து தங்க செயின், கைக்கடிகாரம், பணம் ஆகியவற்றை பறித்து சென்ற வழக்கில் கீழப்பழுவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது தற்போது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!