News November 19, 2025
World Roundup: USA-Saudi அணுசக்தி ஒப்பந்தம்!

*சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், டிரம்ப் சந்திப்பின் போது, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. *தெற்கு ஜப்பானில் உள்ள கடற்கரை நகரில் 170-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது *<<18327094>>எப்ஸ்டீன்<<>> தொடர்பாக கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை டிரம்ப் திட்டியதால் சர்ச்சையானது *ஆஸ்திரேலியாவில் 8 மாத இந்திய கர்ப்பிணி பெண் மீது கார் மோதியதில் பலியானார்.
Similar News
News March 15, 2026
மதியம் தயிர், மோர் குடிப்பதால் தூக்கமின்மை குறையுமா?

தூக்கமின்றி அவதிப்படுவோருக்கு மலிவான விலையில் ஒரு முடிவு கிடைத்துவிட்டது எனலாம். ஏனென்றால், தயிரில் உள்ள டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் தூக்கமின்மையை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, மதியம் தயிர் (அ) மோர் குடிப்பது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இரவில் தயிர் குடிப்பதால் செரிமானக் கோளாறு உண்டாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE
News March 15, 2026
சென்னை தொகுதியை குறிவைக்கிறாரா வானதி?

கோவை தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன், இம்முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியானது. இதனிடையே, இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி அதிமுகவில் இருந்து வெளியேறிய வடவள்ளி சந்திரசேகரை EPS மீண்டும் கட்சியில் சேர்த்ததாக கூறப்பட்டது. இதனால் கோவை வடக்கு கிடைக்காது என அறிந்த வானதி, சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
News March 15, 2026
மக்கள் நாயகன் VR சுவாமிநாதன் காலமானார்

1971-ல் இந்தியா – பாகிஸ்தான் போரில் தீரத்துடன் பணியாற்றிய மக்கள் நாயகனான ஓய்வுபெற்ற பிரிகேடியர் VR சுவாமிநாதன்(94) கோவையில் காலமானார். இந்திய ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் கோவா விடுதலை, நாகாலாந்து கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு ஆற்றியவர். அவரது உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP


