News November 19, 2025
‘வாரணாசி’ டைட்டில் சர்ச்சை வெடித்தது

‘வாரணாசி’ டைட்டில் உரிமம் ராம பிரம்மா ஹனுமா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. ‘Vaaranasi’ என அந்த தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்துள்ள நிலையில், ராஜமௌலி ‘Varanasi’ என தனது படத்திற்கு பெயரிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதான நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ராஜமௌலியும், படத்தின் தயாரிப்பாளரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News March 5, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்த Ex MLA மற்றும் MP-யான வெ. ஏழுமலை, 2 நாளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து எம்.பி.பாலாஜி, முன்னாள் அமைச்சர் T.ராமசாமி மகன் T.R.சீனிவாசன், ராமநாதபுரம், தேனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் EPS-ஐ சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News March 5, 2026
நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.


