News April 25, 2024
வேலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி இன்று (ஏப்ரல் 24) வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
வேலூர்: ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு கொடூரம்!

பேரணாம்பட்டை சேர்ந்த மாணவி (18) நேற்று (பிப்.11) கல்லூரி முடிந்து தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் (52) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் செல்போனில் கூறினார். இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் அப்துல் லத்தீபை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 12, 2026
வேலூர்: மருமகனை தீர்த்து கட்டிய மாமனார்!

கொல்லமங்கலத்தைச் சேர்ந்த ராகவன் (30) சுவேதா (28) என்பவரை 2022-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ராகவன் பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி கே.வி.குப்பம் போலீசார் விசாரித்ததில் ராகவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு மற்றும் தொடர்ந்து பணம் கேட்டு சுவேதாவை கொடுமை படுத்தியதால் சுவேதாவின் தந்தை மருமகனை கொலை செய்தது தெரிய வந்தது.
News February 12, 2026
வேலூரில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

காட்பாடி காவல் நிலையம் அருகே காவலர் குடியிருப்பு பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அதில் ஒரு குடியிருப்பில் நேற்று (பிப்.11) இரவு வட மாநில வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


