News November 19, 2025
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூடுதல் வசதி

உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அடுத்த மாதம் கார்த்திகை டிச.3ஆம் தேதி மகா தீபம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 4764 சிறப்பு பேருந்துகள் 11,293 நடைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
திருவண்ணாமலை மாவட்டம்- ஓர் பார்வை

1.மாநகராட்சி -1 ( தி.மலை)
2.நகராட்சி- 6 ( ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு)
3.பேரூராட்சிகள்- 10
4.வருவாய் கோட்டம்- 3
5.தாலுகா- 12
6.வருவாய் வட்டங்கள் – 12
7.வருவாய் கிராமங்கள்- 1067
8.ஊராட்சி ஒன்றியம்- 18
9.கிராம பஞ்சாயத்து- 860
10.MP தொகுதி- 2 ( தி.மலை, ஆரணி)
11.MLA தொகுதி- 8
12.மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
தி.மலை: பம்பரமாய் சுழலும் பாமக

தேர்தலை முன்னிட்டு பாமகவினர் பம்பரமாய் வேலை செய்து வருகின்றனர். போளூரில் வருகின்ற நாளை (மார்ச்.10) பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. கிழக்கு மேடு கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தி, பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமையில், மாநில இளைஞர் அணி தலைவர் கணேஷ்குமார் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
தி.மலை: அணு அணுவாய் பிரிந்த உயிர்!

வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (81). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


