News April 25, 2024
சச்சினின் சாதனைகள்

▶அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர் (34,347 ரன்கள்) ▶சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ▶200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் ▶463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் ▶அதிக உலகக் கோப்பை போட்டிகளில் (45) பங்கேற்று, அதிக ரன்களை (2,278) குவித்தவர் ▶இந்தியாவுக்காக முதல் இரட்டை சதம் விளாசியவர் ▶அர்ஜுனா, கேல் ரத்னா, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பாரத் ரத்னா விருதுகளுக்கு சொந்தக்காரர்.
Similar News
News January 15, 2026
Grok AI-க்கு கடிவாளம் போட்ட எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் ‘X’ தளம், அதன் Grok AI மூலம் <<18745124>>ஆபாசமாக<<>> சித்தரிக்கும் படங்களை உருவாக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெண்கள், குழந்தைகளின் புகைப்படங்களை Grok AI மூலம் ஆபாசமாக மாற்றப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, X நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த கட்டுப்பாடு சாதாரண பயனர்களுக்கு மட்டுமல்லாமல், பணம் செலுத்தி சந்தா வாங்கியுள்ள பயனர்களுக்கும் பொருந்தும்.
News January 15, 2026
குளிர்காலத்தில் வரும் முக்கிய பிரச்னை.. சரி செய்ய TIPS!

குளிர்காலத்தில் எளிதில் முடி வறண்டு, முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். இதனை தடுக்க 5 வழிகளை பின்பற்றினால் போதும். ➤தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து, 3 நாளைக்கு ஒருமுறை தலைக்கு குளிக்கலாம் ➤Sulphate, Paraben free ஷாம்பு பயன்படுத்துங்கள் ➤கண்டிஷனரை பயன்படுத்துவது அவசியம் ➤முடியை பளபளப்பாக வைக்க சீரம் போடுங்கள் ➤இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியம். SHARE.
News January 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்

சுற்றுச்சுழல் போராளி ஜி.ராஜ்குமார்(70) உடல்நலக்குறைவால் காலமானார். கேரளாவை சேர்ந்த இவர் TN-ன் கொடைக்கானல் முதல் கேரளாவின் மூணாறு வரை உள்ள காட்டுப்பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ‘Save Kurinji’ என்ற நடைபயணத்தை நடத்தினார். இதனால் மூணாறுக்கு அருகில் உள்ள 3,200 ஹெக்டேர் நிலப்பரப்பு குறிஞ்சி மலை, சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இவரது சேவையை மக்கள் மறந்தாலும் மலைகளும், காடுகளும் என்றும் நினைவில் கொள்ளும்.


