News November 19, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து அதிமுக மற்றும் OPS அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வரை OPS கூடவே இருந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் KKSSR முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல், திருவள்ளூர் அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News March 20, 2026
நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் சோகம்

த்ரிஷா<<19411907>> சினிமாவை விட்டு விலக முடிவு<<>> செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய படங்கள், வெப் சீரிஸ் ஆஃபர்களை அவர் நிராகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது திடீர் முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அவர் அரசியலில் ஈடுபடவுள்ளாரா எனவும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து த்ரிஷா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
News March 20, 2026
ஹார்முஸ் நீரிணையில் களமிறங்கும் உலக நாடுகள்

போர் பதற்றத்திற்கு நடுவே ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் பயணத்திற்கு உதவ தயார் என ஜப்பான் & ஐரோப்பிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஜப்பான் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ளன. ஈரானின் தாக்குதலுக்கு இந்நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மைக்கும் உறுதியளித்துள்ளன.
News March 20, 2026
சற்றுமுன்: தங்கம் விலை தலைகீழாக மாறியது

சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்வது நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த <<19430677>>தங்கம்<<>> விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 அவுன்ஸ் தங்கம் $112 (₹10,459) உயர்ந்து $4,716-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாள்களில் தங்கம் விலை அப்படியே தலைகீழாக மாறி உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


