News April 25, 2024

காதலனை கைப்பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்

image

நடிகை அபர்ணா தாஸ், தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார். டாடா, பீஸ்ட் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பரை காதலித்து வந்தார். திருமணம் அறிவிப்பை வெளியிட்ட அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், இன்று இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News

News January 12, 2026

ரயில்வேயில் வேலை.. ₹45,000 வரை சம்பளம்

image

இந்திய ரயில்வேயில் வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளர், அறிவியல் உதவியாளர், ஆய்வக உதவியாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட பதவிகளில் 312 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளம்: ₹19,900 – ₹44,900 வரை. வயது வரம்பு: 18- 40 வரை இருக்கலாம். தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News January 12, 2026

சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான்: ஜீவா

image

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் தள்ளிப்போனதால், ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜன.15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், புரோமோஷன் விழாவில் சென்சார் போர்டு தொடர்பாக ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் நடித்த ஜிப்ஸி திரைப்படத்திற்கு 48 கட் கொடுத்ததாகவும், சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான் என கலகலப்பாக பதிலளித்தார்.

News January 12, 2026

அண்ணாமலை போட்டியிடப் போகும் தொகுதி இதுவா?

image

2024 தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோற்றார் அண்ணாமலை. இருப்பினும், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதால் அப்பகுதியிலேயே வரும் தேர்தலில் அவரை களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் (அ) வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறங்க வாய்ப்பு என கூறப்படுகிறது.

error: Content is protected !!