News April 25, 2024
மோடிக்கு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு

பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது முஸ்லிம் வெறுப்பை மோடி கக்கியிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான விஷம் தோய்ந்த கருத்துகளை வெளியிட்ட மோடியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் அப்படி இருக்க மாட்டார்கள்; சரியான பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 8 வருடங்களாக பிரிந்து ராமசாமி அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் ராமசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 5, 2026
BREAKING: பணம் அறிவித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

TAPS ஓய்வூதிய திட்டத்தை CM ஸ்டாலின் அறிவித்ததால், ஜன.6 முதல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வூதியத்தை மீட்டெடுக்கும் முயற்சியை நிறுத்தி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை CM அறிவித்தது வெற்றிதான். ஏனைய 9 அம்ச கோரிக்கைகளை முழுமையாக பெறுவதற்கான போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
News January 5, 2026
நாள்தோறும் நாடகம் நடத்தும் திமுக: EPS

இன்று மாணவர்களுக்கு CM ஸ்டாலின், லேப்டாப் வழங்கவிருக்கும் நிலையில் EPS விமர்சித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் கொடுக்காமல் இளைஞர்களை திமுக அரசு வஞ்சித்தது. ஆனால், தற்போது தேர்தல் வருகிறது என்றதும் இளைஞர்களின் வாக்கைப் பெற லேப்டாப் கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுகிறது. நாள்தோறும் திமுக நடத்தும் நாடகங்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.


