News November 19, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (19-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் 5 காசுகள் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ரூ.6.05 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 13, 2026
நாமக்கல்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply Now!

நாமக்கல் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். SHARE IT
News March 13, 2026
நாமக்கல்லில் முட்டை விலை ரூ. 4.35- ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.35-ஆக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ.4.35-ஆக நீடிக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக முட்டை கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News March 13, 2026
நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,00,000 SUPER திட்டம்!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது நிச்சயம் இது உதவும்!


