News November 19, 2025

BREAKING: பதவியை பறித்தார் ஸ்டாலின்

image

கோவை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை பறித்து, ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து கொண்டே, அதிமுகவினருடன் மகாலிங்கம் தொடர்பில் இருந்துள்ளார். இன்று நடந்த ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின்போது, இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், உடனே அவரின் கட்சிப் பதவியை, ஸ்டாலின் பறித்துள்ளார். மேலும், பதவி பறிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் திமுகவினரை எச்சரித்துள்ளார்.

Similar News

News March 22, 2026

போலீஸ் பார்வையாளர் அரக்கோணத்தில் திடீர் ஆய்வு

image

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி போலீஸ் பார்வையாளராக நிலாப் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று மார்ச் 21ஆம் தேதி அரக்கோணம் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு செய்தார் . அப்போது அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் எத்தனை ரவுடிகள் உள்ளனர் அவர்களின் தற்போதைய நிலை என்ன தினமும் அவர்களை போலீசார் கண்காணிக்கிறார்களா என்று கேட்டறிந்தார் ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் உடனிருந்தார்.

News March 22, 2026

விஜய் ₹1,500 கோடி சம்பாதித்து இருப்பார்: ஆதவ்

image

மதச்சார்பற்ற கொள்கையில் விஜய் உறுதியாக இருப்பதால் தான் ஜன நாயகன் படம் இன்னமும் முடக்கப்பட்டிருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். விஜய் பாஜகவின் B டீமாக இருந்திருந்தால் ஜனவரி மாதத்திலேயே ஜன நாயகன் ரிலீசாகி இருக்கும் என்றும், அதன் மூலம் அவர் ₹1,500 கோடி சம்பாதித்திருப்பார் எனவும் ஆதவ் பேசியுள்ளார். ஆனால், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கோர்ட்டில் CBFC கூறியிருந்தது.

News March 22, 2026

ராசி பலன்கள் (22.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!