News November 19, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது
Similar News
News March 5, 2026
மயிலாடுதுறை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 5, 2026
மயிலாடுதுறை தொகுதி: திமுகவில் ஒலிக்க தொடங்கிய குரல்..

மயிலாடுதுறை தொகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு, தற்போது எஸ்.ராஜகுமார் எம்எல்ஏ-வாக இருந்து வருகிறார். ஆனால், இம்முறை மயிலாடுதுறை தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல், திமுக சார்பில் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என குரல்கள் கட்சிக்குள் ஒலிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 5, 2026
மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவு கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவர்கள் 04365 299765 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.


