News April 25, 2024

மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை

image

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், பூங்கா நகர், காக்களூர் ஊராட்சிகள் உள்ளது. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து தினசரி ஏராளமானோர் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். மினி பேருந்துகள் இயக்கினால் வேலைக்கு செல்கின்றவர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பயனடைவார்கள். எனவே, பஸ் இயக்க வேண்டும்’என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Similar News

News April 19, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

image

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 682 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News April 19, 2025

1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழா

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 18) நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 418 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும். 2.02 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக 1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இந்த விழா அமைந்தது.

News April 18, 2025

திருவள்ளூர்: இருதய நோயை குணப்படுத்தும் கோவில்

image

திருவள்ளூர், திருநின்றவூரில் அமைந்துள்ளது அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திங்கட்கிழமைகளில் வந்து பயபக்தியுடன் பிரார்தனை செய்தால் எப்பேர்பட்ட இதய நோயானாலும் குணமாகும் என பக்தர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட டாக்டர்கள் தங்கள் நோயாளிகள் குணமாக இங்கு வந்த பிரார்த்னை செய்கிறார்கள் எனவும் தகவல் உள்ளது. *நீங்களும் கண்டிப்பா போங்க. நண்பர்களுக்கும் பகிரவும்

error: Content is protected !!