News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News March 14, 2026
புதுச்சேரி: ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவர்கள் கைது

புதுச்சேரி, மங்கலம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் அக்ஹாரம் திருமுருகன் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று 9 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி, இரும்பு கம்பி, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதனர்.
News March 14, 2026
புதுச்சேரி: சிறைத்துறை ஐ.ஜி.க்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி சிறைத்துறையின் ஐ.ஜி.யாகவும் மற்றும் துறைமுகத்துறையின் இயக்குனராகவும் மோகன்குமார் பதவி வகித்து வருகின்றார். மேலும் அவருக்கு கூடுதல் பொறுப்பு பதவியாக, புதுச்சேரி கூட்டுறவு துறையின் பதிவாளராகவும், பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் முருகேசன் நேற்று பிறப்பித்துள்ளார்.
News March 14, 2026
புதுச்சேரி : புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் -1 <


