News November 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது

Similar News

News November 21, 2025

மயிலாடுதுறை: +2 மாணவி கர்ப்பம்-வாலிபர் கைது!

image

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த +2 படித்து வரும் 17 வயதான மாணவி, குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த சூர்யா (20) என்பவரை காதலித்து வந்ததுள்ளார். இந்த நிலையில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது சூர்யா ஆசைவார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்ததும், இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் சூரியாவை கைது செய்துள்ளனர்.

News November 21, 2025

மயிலாடுதுறை: SIR சந்தேகங்களுக்கு எண்கள் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு பொதுமக்கள் மாவட்ட அளவில் மற்றும் சட்ட மன்ற அளவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (1950), சீர்காழி (தனி)- 04364270222, மயிலாடுதுறை 04364222033, பூம்புகார் 04364289439 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 21, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று (நவ.20 )இரவு முதல் இன்று(நவ.21) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!