News April 25, 2024
விழுப்புரம்: கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2005ம் ஆண்டு நிலத்தகராறில், குலசேகரன், காத்தவராயம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 6 பேர் வழக்கு நடந்த காலங்களில் மரணமடைந்தனர். இவர்கள் தவிர்த்து மீதமுள்ள 20 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Similar News
News January 31, 2026
விழுப்புரம்: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <
News January 31, 2026
கள்ளக்காதல் விவகாரம் – கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

பி.அரியலூர் கிராமத்தில் ராஜகுமாரன் கடந்த 2020 ஆம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ராஜகுமாரனின் மனைவி லதா மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் பிடித்து நீதிபதி ராஜசிம்மவர்மன் இன்று (ஜன.31) உத்தரவிட்டுள்ளார்.
News January 31, 2026
விழுப்புரம்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

விழுப்புரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <


