News April 25, 2024
மத்திய அரசு சான்றிதழுடன் தொழில் பயிற்சி

மதுரை புதுார் தொழிற்பேட்டை MSME தொழில்நுட்ப அலுவலகத்தில், வருமான வரி, ஜி.எஸ்.டி, பிராக்டிசனர் பயிற்சி வகுப்புகள் ஏப்.,28 முதல் மே 1 வரை தனித்தனியே 2 நாட்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் இதில் கலந்துகொள்ளலாம். விரும்புவோர் 0452 – 2568313 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 18, 2026
மதுரையில் நிலம் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <
News February 18, 2026
மதுரை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT
News February 18, 2026
மதுரை: திருமணம் நிச்சயமான தம்பதிக்கு நடந்த துயரம்

தி.குன்றம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசி பிரஜின் (20) மற்றும் தோப்பூரைச் சேர்ந்த சசிகலாதேவி (18) காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மோட்டார்சைக்கிளில் சென்றபோது தோப்பூர் மேம்பாலம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகலாதேவி உயிரிழந்தார். பிரஜின் மதுரை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


