News April 25, 2024
இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு

2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். ராகுல் காந்தி மாலை அமராவதியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவிலும் இன்று இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார்கள்.
Similar News
News January 6, 2026
நகைச்சுவை நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

காமெடி நடிகர் வெங்கட்ராஜ், நுரையீரல் பிரச்னையால் ஜன.4-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு ‘லொள்ளு சபா’ குழுவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஈஸ்டர், வெங்கட்ராஜுடன் எடுத்த போட்டோக்களை SM பக்கத்தில் பகிர்ந்து, Rest in peace என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். மேலே போட்டோக்களை ஸ்வைப் செய்து, வெங்கட்ராஜின் மகிழ்ச்சியான தருணங்களை நீங்களும் பாருங்க!
News January 6, 2026
விரைவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்?

எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதுபோல, 30 நாள்கள் சிறையில் இருந்தால் CM-ன் பதவியை பறிக்கும் மசோதாவும் தாக்கலாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடங்கும் நிலையில், முதல்முறையாக ஞாயிறன்று(பிப்.1) பட்ஜெட் தாக்கலாகும் என கூறப்படுகிறது. இதுபற்றி அபிஷியல் தகவல் வெளியாகவில்லை.
News January 6, 2026
₹2,000 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளில் 98.41% மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ₹5,669 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை RBI-ன் கிளை அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 2023 மே மாதத்தில் இருந்து ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை RBI நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


