News April 25, 2024
டெல்லி அணிக்கு பதிலடி தருமா குஜராத் அணி?

ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை குஜராத் அணி இன்று எதிர்கொள்கிறது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற குஜராத் அணி இந்த போட்டியில் பதிலடி தருமா என ரசிகர்கள் கமெண்டில் கூறலாம்.
Similar News
News November 13, 2025
பெண்களுக்கு மாதம் ₹1200 தரும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

கணவனை இழந்து, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 40- 79 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு மாதம் ₹1,200 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின், பயனாளி 80 வயதை அடைந்த பிறகு, அவருக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து முதியோர் ஓய்வூதியமாக மாதம் ₹500 வழங்கப்படும். விதவை சான்றிதழ், ஆதார், Voter ID, BPL அட்டை, முகவரி சான்றுடன் இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பல பெண்களுக்கும் பயனுள்ள இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 13, 2025
முடிவுக்கு வருகிறது அமெரிக்க அரசின் முடக்கம்

USA-வில் காப்பீட்டு திட்டத்தின் மானியங்களை விடுவிப்பது தொடர்பான மோதலில் அரசுக்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அரசு முடங்கியது. இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை, அந்நாட்டின் மிக நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிதி மசோதா மீது வாக்களிப்பை தொடங்கியது. ஜனநாயக கட்சி எதிர்த்தாலும், குடியரசு கட்சி 213-209 என்ற வாக்குகளில் மசோதாவை இறுதி வாக்கெடுப்புக்கு நகர்த்தியுள்ளது.
News November 13, 2025
அஜித்குமார் வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

போலீஸ் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வழக்கில், கைதான தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 3 பேருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நவ.19-க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


