News April 25, 2024
உயர்கல்வி சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 2023- 2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெரும் மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
Similar News
News October 12, 2025
சாத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(55) சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்று வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாத்தூரில் இருந்து மீனம்பட்டி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மேட்டமலை அருகே நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News October 12, 2025
சிவகாசி: அடுத்தடுத்து அலறிய சைரன்கள்

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1100 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை
23 வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 37 காயமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 1.07.2025 அன்று சின்னக்காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
News October 12, 2025
விருதுநகர்: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

மத்திய அரசு சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. அரசு நகர்ப்புற, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.