News November 19, 2025
FLASH: சென்னை ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஏர்போர்ட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிராங்க்பர்ட், துபாய், கோலாலம்பூர் விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
தங்கம் விலை சரசரவென குறைந்தது

ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், தங்கம் விலை நிலவரம் இந்த வாரம் மக்களுக்கு நிம்மதியையே கொடுத்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 1 சவரன் தங்கம் விலை ₹2,320 குறைந்துள்ளது. சென்னையில் மார்ச் 7-ல் 1 சவரன் ₹1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், தற்போது ₹1,18,080ஆக சரிந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News March 14, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. சிறுவன் சிக்கினான்

பெண் குழந்தைகள் மீதான கொடுமைகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஹைதராபாத் அருகே 17 வயது மாணவன் தனது வயதுடைய 3 சிறுமிகளை ரேப் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கர்ப்பமான ஒரு சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பும் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாணவனுடன் சேர்த்து அவனது 22 வயது நண்பன், 2 டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News March 14, 2026
உங்க நகம் ‘இப்படி’ இருக்குதா?

நகத்தின் கலரை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை சொல்லலாம். வெளிர் நகங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையாக இருக்கலாம் *நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்னையை குறிக்கிறது *கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயின் அறிகுறி *மஞ்சள் நிறம்: நகத்தில் பூஞ்சை தொற்று *வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது. ஆரோக்கியமான நகங்கள் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.


