News April 25, 2024
வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்

புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கோதண்டராம சுவாமிக்கு ராம நவமி உற்சவம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 30 ஆம் தேதி தெப்ப உற்சவமும், 1 ஆம் தேதி முத்து பல்லாக்கு வீதியுலாவும், 2 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.
Similar News
News January 17, 2026
புதுச்சேரி: திருமண தடை நீங்க! இங்க போங்க

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாந்தீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வேதாந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
புதுவை: அதிக மது குடித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

புதுவை மாநிலம் கோட்டுச்சேரி சுனாமி நகர் செல்வகுமார்(56) மாற்றுதிறனாளி மனைவி சின்னபொண்ணு. இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். செல்வகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்தவர், மண்டபத்தூர் சாராயக்கடை அருகே இறந்து கிடந்துள்ளார். கோட்டுச்சேரி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
புதுவை: பெண்ணிடம் ரூ.17.30 லட்சம் ஏமாற்றிய இளைஞா் கைது

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த எழிலரசி (50). திருமண அழைப்பிதழ் அச்சிடச் சென்ற போது ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, அச்சக உரிமையாளர் ரமேஷ் (38) ரூ.17.30 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை காவல் நிலையம் போலீஸார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


