News November 19, 2025

மதுரையில் வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை

image

மதுரை, எம்.கே.புரத்தில் பல வழக்குகள் உள்ள முத்துமணி போஸ்(28) நேற்று இரவு அப்பகுதி மதுபான கடையில் மது அருந்தும் போது அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறாக மாறியது. அப்போது முத்துமணி போஸ் ஒருவரை தாக்கியுள்ளார். ஆத்திரமுற்ற அந்த நபர் தனது நண்பர்களை அழைத்து வந்து முத்துமணியை ஓட ஓட விரட்டி, ஆயுதங்களால் தாக்கியும் தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 7, 2026

மதுரை மாவட்ட அரசு மருத்துவமனை எண்கள்

image

1.ராஜாஜி மருத்துவமனை – 04522533230

2.தோப்பூர் தொற்றுநோய் மருத்துவமனை – 04522482339

3.தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை – 04522482439

4.திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – 0452280727

5.பாலரங்கபுரம் அரசு மருத்துவமனை – 04522337902

5.மதுரை அரசு மருத்துவகல்லூரி – 04522526028

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்களை உங்கள் பகுதி மக்களுக்கு SHARE செய்யவும்.

News March 7, 2026

இன்று மதுரை வருகிறார் முதல்வர்

image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை வருகை. இதுகுறித்து அமைச்சர்
பி.மூா்த்தி, மாவட்டச் செயலா்கள் கோ. தளபதி, மு. மணிமாறன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில்; ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக்காக இன்று மதுரை வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் காலை 11 மணிக்கு திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதில் திமுக நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

News March 7, 2026

மதுரை: போலீஸ் SI-ஐ தாக்கிய இளைஞர் கைது

image

பேரை­யூ­ர் எஸ்எஸ்ஐ அழ­கர்­சாமி(50) நேற்றிரவு பணி முடிந்து திருப்­ப­தி­ ந­கர் வழி­யாக வீட்­டிற்கு சென்ற போது, ஹரி(24), என்பவர் தனது தாயை தாக்கி கொண்­டி­ருந்­தார். அதை தடுத்த அழ­கர்­சாமியை ஹரி அரு­கி­லி­ருந்த கம்பியை பிடுங்கி தலை­யில் அடித்­தார். இதில் படு­கா­ய­ம­டைந்த எஸ்எஸ்ஐ மதுரை தனி­யார் மருத்­து­வம­னைக்கு அனுப்பி
வைக்கப்பட்டார். பேரை­யூர் போலீ­சார் ஹரி­யை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!