News April 25, 2024
நிதிஷ்குமாரின் சர்ச்சை பேச்சுக்கு தேஜஸ்வி பதிலடி

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பலர் அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிதிஷ்குமாரின் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் பதிலளித்துள்ளார். நிதிஷ் எதைச் சொன்னாலும் அதை ஆசிர்வாதமாகவே கருதுவோம். ஏனெனில், அவர் வயதில் மூத்தவர். ஆனால், இதைச் சொல்வதால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக் கூறினார். முன்னதாக லாலுவை குறிவைத்து நிதிஷ் தேர்தல் பரப்புரையில் இவ்வாறு பேசினார். லாலுவுக்கு 7 மகள் 2 மகன்கள் உள்ளனர்.
Similar News
News January 10, 2026
பிணையம் இல்லாமல் லோன் கிடைக்கும்.. அசத்தல் திட்டம்!

எந்த பிணையமும் இல்லாமல் பெண்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்திருக்க வேண்டும். கடனை திரும்பிச் செலுத்த 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. உங்களது வங்கியின் இணையதளத்தின் வாயிலாக இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். புதிய தொழில் தொடங்கும் ஐடியாவில் இருக்கும் பெண்களுக்கு SHARE THIS
News January 10, 2026
ஒரே மேடையில் விஜய், பிரேமலதா, TTV?

அடுத்ததாக சேலம் (அ) தருமபுரியில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதனிடையே, தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் கட்சிகளுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியானால், விஜய், பிரேமலதா, TTV, கிருஷ்ணசாமி ஆகியோர் ஒரே மேடையில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
News January 10, 2026
DRY DAY: டாஸ்மாக் கடைகள் 3 நாள்கள் விடுமுறை

ஜன.16(திருவள்ளுவர் தினம்), ஜன.26(குடியரசு தினம்), பிப்.1(வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக TASMAC மேலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பார்கள், சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டு DRY DAY-வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


