News April 25, 2024

எடப்பாடி அருகே விவசாயி குத்திக்கொலை

image

எடப்பாடி அருகேயுள்ள இருப்பாலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(50). இவருக்கும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகன் தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.23) காலை கோவிந்தனிடம் முருகன் மற்றும் அவரது மகன்
தாமோதரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் கோவிந்தனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 24, 2025

2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை அவசியம்!

image

சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விவசாயிகள் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம் அறிந்து கொள்ள 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி, சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்யலாம்.

News August 24, 2025

சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனை!

image

சேலம் வீரபாண்டி, ரெட்டிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதியினருக்கு கடந்த 9 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 24, 2025

பெண் குழந்தைகளுக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!