News April 25, 2024

மத வேறுபாடின்றி நீதி வழங்குவதே காங்., நோக்கம்

image

மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸின் நோக்கமென முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், ஏதேனும் ஒரு சமூகத்தை திருப்திப்படுத்துவது போல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு பத்தியாவது இருப்பதாக காட்ட முடியுமா என்று பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் சவால் விடுத்துள்ள சிதம்பரம், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

திண்டுக்கல்லில் மாவட்ட ஆய்வுக் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 23, 2025

வாரத்தில் ஒருநாள் சோம்பேறியா இருங்க!

image

இன்றைய நவீன காலத்தில் எப்போது பார்த்தாலும் மன அழுத்தமாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் அதிகம். ஆனால், வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக சோம்பேறியாக இருந்தால் மன அழுத்தம் குறையுமாம். அதுமட்டுமல்லாமல், ரத்த அழுத்தம் சீராகி, மனநலம் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஓய்வு எடுப்பது நேரத்தை வீணடிப்பதல்ல; அது படைப்பாற்றலை அதிகரித்து, கவனத்தை கூர்மையாக்கி உழைப்புத் திறனையும் அதிகரிக்கிறதாம்.

News August 23, 2025

இது நடந்தால் CM ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து

image

பதவி பறிப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவர முயலும் நிலையில், CM-களின் கிரிமினல் வழக்குகளை ADR வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி முதலிடம்(89), TN CM ஸ்டாலின் 2-வது இடம்(47), AP CM சந்திரபாபு 3-வது இடம்(19) வகிக்கின்றனர். மேலும், BJP ஆளும் MH-ல் CM பட்னவிஸ் 4 வழக்குகளுடன் 6-வது, KL CM பினராயி 8-வது இடத்தில் உள்ளனர். இந்த மசோதா சட்டமானால் இவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்படும்.

error: Content is protected !!