News April 25, 2024

3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1,351 பேர் போட்டி

image

மக்களவைத் தேர்தலில் 3ஆம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மே 7இல் நடைபெறவுள்ளது. 96 இடங்களுக்கு போட்டியிட 2,963 பேர் மனு செய்து இருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு 1,563 மனுக்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டது. நேற்றுடன் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், 1,351 பேர் கொண்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Similar News

News January 12, 2026

2026-ன் முதல் மெகா சம்பவம்.. சீறும் PSLV!

image

2026-ம் ஆண்டின் முதல் விண்வெளி ஏவுதல் இன்று நடைபெற உள்ளது. PSLV-C62 ராக்கெட் மூலம் இன்று 16 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில், ‘EOS-N1 Anvesha’ எனப்படும் DRDO-ல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள், இந்தியாவின் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 வணிக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

News January 12, 2026

காலம் காலமாக போராட வேண்டிய அவலம்: OPS

image

தமிழக அரசின் வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். காலமுறை ஊதியத்திற்காக காலம் காலமாக போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் கிராம உதவியாளர்களின் பணி இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

ஈரானில் இந்தியர்கள் கைதா?

image

<<18832349>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாக 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் நிலைமை குறித்த உடனடி தகவல்களுக்கு நம்பகமான செய்தி நிறுவனங்களை அணுகவும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!