News April 25, 2024
பூனையால் படிப்பை தவறவிட்ட மாணவர்!

சீனாவில் நுழைவுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தும், பூனையைத் துன்புறுத்தியதற்காக மாணவர் ஒருவருக்கு கல்லூரியில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அங்கு சமீபத்தில் சூ (Xu) என்ற மாணவர் பூனையை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால் நான்ஜிங் பல்கலைக்கழகம், இயற்பியல் படிப்பில் சூ முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும், நடத்தை அடிப்படையில் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Similar News
News January 3, 2026
வரிவிதிப்பால் அமெரிக்கா செழிக்கிறது: டிரம்ப்

வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை கண்டிராத அளவில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் வரிவிதிப்பு பயனளித்துள்ளதாக அவர் SM-ல் குறிப்பிட்டுள்ளார். தங்களது நாட்டை நியாயமற்ற முறையில் நடத்திய இதர நாடுகளுக்கு வரிவிதிக்கும் திறனை இழந்திருந்தால், அமெரிக்காவுக்கு பயங்கரமான இழப்புக்கு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 3, 2026
T20 WC: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

டி20 WC-க்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் தலைமையிலான அணியில் போஸ்ச், பிரேவிஸ், டி காக், டி ஜோர்ஜி, டோனோவன், யான்சென், லிண்டே, கேஷவ் மகாராஜ், மபாகா, மில்லர், இங்கிடி, நார்ட்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித் ஆகியோர் உள்ளனர். அதிரடி வீரர்கள் ரிக்கல்டன், ஸ்டப்ஸ் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. 2024 WC ஃபைனலில் இந்தியாவிடம் நூலிழையில் தோற்ற SA, இம்முறை சாம்பியனாகும் முனைப்பில் உள்ளது.
News January 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 569
▶குறள்:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
▶பொருள்: நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்


