News April 24, 2024
எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று!

பேரறிவின் சிறுப்பிள்ளைத் தனங்களும், சிற்றறிவின் மேதா வித்தனங்களும் நிறைந்த மண்ணின் மைந்தர்களில் ஒருவரான எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று. ‘என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்’ என எண்ணுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தனின் படைப்புகள் காலம் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும்.
Similar News
News January 9, 2026
விவசாயிகளை ஏமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை

விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு திமுக அரசு தலா ₹3,000 கொடுத்துள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் விளம்பரத்திற்காக விவசாயிகளை திட்டமிட்டு திமுக அரசு மோசடி செய்திருப்பதாகவும் அவர் X-ல் சாடியுள்ளார். எனவே, விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டுமென அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 9, 2026
சற்றுமுன்: ஒரே நாளில் ₹4,000 குறைந்தது.. HAPPY NEWS

வெள்ளி விலை இன்று (ஜன.9) கிராமுக்கு ₹4 குறைந்து ₹268-க்கும், 1 கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,68,000-க்கும் விற்பனையாகிறது. ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் வெள்ளி விலை 2 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹9,000 குறைந்துள்ளது. அதேநேரம், தங்கம் விலை இன்று உயர்ந்த நிலையில், வெள்ளி குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 9, 2026
உலகின் மிகவும் கஷ்டமான தேர்வுகள் இவைதான்!

எக்ஸாம் என்றாலே நம்மில் பலருக்கும் கஷ்டம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும், பாஸ் பண்ணுவதற்கு மிகவும் கடினமான தேர்வுகளும் உலகில் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி உலகின் டாப் 9 கடினமான தேர்வுகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யுங்க. நீங்க எழுதிய கஷ்டமான எக்ஸாம் எது?


