News April 24, 2024

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வங்கிகளுக்கு அதிகாரமில்லை

image

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரமில்லையென மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளிடம் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரைத் தடுக்க, 2018இல் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த அதிகாரத்தை அளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் அறிவிப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News November 13, 2025

இயற்கை அழகு கொஞ்சும் இந்தியாவின் ரயில் பயணங்கள்!

image

பயணங்கள் நமக்கு இருக்கும் டென்ஷனை ஈசியாக காலி செய்யும் தன்மை கொண்டவை. இந்தியாவில் இயற்கையின் அழகியலை ரசித்தபடியே நாம் பயணிக்க சுவாரசியமான பல ரயில் பயணங்கள் உள்ளன. அப்படி, இந்தியாவில் ஒருமுறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டிய ரயில் பயணங்களை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை தெரிந்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் செய்த பயணம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 13, 2025

50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

image

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடப்பாண்டில் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பயிற்சிகளை பெற விரும்புபவர்கள் 18- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மற்றும் வட்டார இயக்க மேலாளரை தொடர்பு கொள்ளலாம். எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்பட 30 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

News November 13, 2025

திமுகவில் இணைந்தனர்

image

அதிமுக, OPS அணியிலிருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், புறக்கணிக்கக்கூடிய, துரத்தி அடிக்கப்படக்கூடிய, அபகரிப்பு அரசியலில் இருந்து தப்பி வரக்கூடியவர்களுக்கு அறிவாலயம் அன்பு சரணாலயமாக உள்ளது. தனது ஆதரவாளர்கள், அதிமுக, OPS அணியில் இருந்து விலகிய ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் உள்பட 500 பேர் திமுகவில் இணைந்ததாக கூறினார்.

error: Content is protected !!