News April 24, 2024
அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்துவோரா நீங்கள்?

காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும். காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும், பட்ஸ் பயன்படுத்துவதால் காதுகளின் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு பாதிப்புக்குள்ளானால் உணவின் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படலாம்.
Similar News
News January 15, 2026
ஒற்றுமையை பிரதிபலிக்கும் பொங்கல்: PM மோடி

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையை காண்பது மகிழ்ச்சி. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இத்திருநாள் நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இப்பொங்கல், அனைவருக்கும் புதிய உற்சாகத்தை வழங்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.
News January 15, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் பொங்கலிட்டு வரும் பெண்களுக்கு சற்றுமுன் தித்திப்பான செய்தி வெளியாகியுள்ளது. ஆம்! பொங்கல் நாளில் தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை முதலே 1.40 கோடி குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் 29-வது தவணையாக ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. உங்க செல்போனுக்கு மெசேஜ் வந்துவிட்டதா என்பதை செக் பண்ணுங்க!
News January 15, 2026
நீங்க இன்று 2 பொங்கல் வைப்பீங்களா?

பொங்கல் நாளில், படையலுக்கான பொங்கல் 2 வகைகளாக வைக்கப்படும். பச்சரிசி சாதத்தை குழைய வைத்து செய்யும் வெண் பொங்கல் ஒரு பானையிலும், சர்க்கரை பொங்கல் மற்றொரு பானையிலும் வைக்கப்படும். சர்க்கரை பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். வெண் பொங்கல் இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இது அறுவடை, குடும்பம் & செல்வ செழிப்பையும் குறிக்கிறது. நீங்க எத்தனை பானை பொங்கல் வைப்பீங்க?


