News April 24, 2024
நெட் இல்லாமலே வாட்ஸ்அப்பில் ஃபைல் அனுப்பலாம்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி பல்வேறு புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது. அந்த வகையில், இணைய வசதி இல்லாமல் படங்கள், வீடியோக்கள், ஆவணங்களைப் பகிரும் வசதியை வாட்ஸ் அப் சோதித்து வருகிறது. ப்ளூடுத்தைப் பயன்படுத்தி உருவாகி வரும் இந்தப் புதிய வசதி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை செல்போனில் மட்டுமின்றிக் கணினிகளிலும் பயன்படுத்த முடியும்.
Similar News
News January 14, 2026
விஜய் உடன் இணையவில்லை.. முடிவை அறிவித்தார்

தான் தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் கற்பனையானது என EX IAS அதிகாரி சகாயம் மறுத்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், அது முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் கூறப்படும் தகவல் எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேநேரம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என மாற்றத்திற்கான அரசியல், ஊழல் இல்லாத அரசியல் TN-ல் உருவாக வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
BREAKING: இந்தியா பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-ல் NZ டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, KL ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா?
News January 14, 2026
ராமதாஸை சமாதானம் செய்ய முயல்கிறதா பாஜக?

அன்புமணி ஏற்கெனவே இணைந்துவிட்டதால், அதிமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய தயக்கம் காட்டுவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், ராமதாஸ் தரப்புடன் பாஜக முக்கிய தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகவும், மோடி தலைமையில் ஜன.23-ல் மதுராந்தகத்தில் நடைபெறவிருக்கும் NDA கூட்டணித் தலைவர்கள் <<18852821>>பொதுக்கூட்டத்தில் <<>>அவரை பங்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்வதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


