News April 24, 2024
அடுத்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும் இடம் உறுதி

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும், இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரயில்வேத் துறையின் தரம் அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும் என்றார். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 12, 2026
7 மாவட்டங்களில் கனமழை பொளக்கும்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News January 12, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 12, மார்கழி 28 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News January 12, 2026
Cinema Roundup: நயன் சம்பளம் ₹15 கோடியா?

*பூரி ஜெகநாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் VJS பிச்சைக்காரன் கேரக்டரில் நடிப்பதாக தகவல். *‘பராசக்தி’ படத்தில் ஸ்ரீலீலா தனது சொந்த குரலில் தமிழ் டப்பிங் பேசியுள்ளார். *‘டிமாண்டி காலனி 3’ படத்தின் சாட்டிலைட் + OTT உரிமத்தை ₹50 கோடிக்கு ஜீ5 நிறுவனம் வாங்கியதாக தகவல். *‘டாக்ஸிக்’ படத்தில் நடிக்க நயன்தாரா ₹15 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்.


