News April 24, 2024
12 ஓவர்களுக்குப் பின் முதல் சிக்ஸர்

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நிதானமாக ஆடிவரும் சென்னை அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ரஹானே, மிட்செல், ஜடேஜா மூவருமே ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் 12ஆவது ஓவரில் களமிறங்கிய ஷிவம் தூபே 12.5ஆவது ஓவரில் முதல் சிக்ஸரைப் பதிவு செய்தார். அதன்பின் ருதுராஜ் 14.1ஆவது ஓவரில் தனது முதல் சிக்ஸரை அடித்தார்.
Similar News
News January 15, 2026
பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்து டிரம்ப் அதிரடி முடிவு!

உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கான விசா நடைமுறையை வரும் 21-ம் தேதி முதல் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களால் வெளிநாட்டினர் அளவுக்கு அதிகமாக பயன்பெறுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம், ரஷ்யா, ஈரான், குவைத் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக கருதப்பட்ட பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இப்பட்டியலில் உள்ளன.
News January 15, 2026
IND vs PAK: உலகெங்கும் எகிறிய மவுசு!

டி20 WC-யில் IND vs PAK மோதும் போட்டி பிப்.15-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்பனை தளமான BookMyShow செயலிழந்தது. பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முண்டியடித்ததால் சர்வர்கள் செயலிழந்துள்ளன. இது, இப்போட்டிக்கு உலக அளவில் இருக்கும் எதிர்பார்ப்பை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News January 15, 2026
டெல்லியில் மனைவியுடன் SK பொங்கல் கிளிக்ஸ்

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதன்போது, கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை, ‘முதல் முறையாக டெல்லியில் பொங்கல் கொண்டாட்டம்’ என்ற கேப்ஷனோடு ஆர்த்தி சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையில் இந்த கியூட் கப்பிள்ஸ் எப்படி இருக்காங்க கமெண்ட் பண்ணுங்க.


