News April 24, 2024
கோவை: நாளை தொடங்கும் செமஸ்டர் தேர்வு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் நாளை (ஏப்.24) முதல் நடைபெற உள்ளது. வழக்கமாக தேர்வுகள் ஏப்ரல் மாத துவக்கத்தில் துவங்கி இறுதியில் முடிந்து விடும். ஆனால், நடப்பாண்டில் மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மே.5ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 12, 2026
உக்கடம்: மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
கோவையில் இப்பகுதியில் மின்தடை

கோவை மாவட்டத்தில் இன்று (ஜன.12) மின் பராமரிப்பு பணிகளால் பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி. பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)
News January 12, 2026
மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்