News April 24, 2024
அரை சதம் கடந்தார் ருதுராஜ்

லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிவரும் ருதுராஜ் அரைசதம் கடந்துள்ளார். தற்போது வரை 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகளுடன் 64* ரன்கள் அடித்துள்ளார். இதையடுத்து CSK அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிக முறை (17) 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக டு ப்ளஸி (16) உள்ளார். CSK 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News January 14, 2026
சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.
News January 14, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்

ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், EPS-யை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று தமமுகவின் நிறுவனர் <<18845319>>ஜான் பாண்டியன்<<>>, தாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் EPS இறங்கியுள்ளார். வரும் 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்ய அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.
News January 14, 2026
இது ரவுடித்தனம். சுதா கொங்கரா டைரக்ட் அட்டாக்!

முகம் தெரியாத ID-க்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள் என சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல் ரீதியான எதிர்ப்பு இல்லை என குறிப்பிட்ட அவர், வெளிவராத படத்தின் நடிகரின் ரசிகர்களின் செய்வது என நேரடியாக விஜய் ரசிகர்களை குற்றம் சாட்டினார். மேலும், இது ரவுடித்தனத்தை என சுட்டிக்காட்டி, அதனை தாங்கள் எதிர்த்து போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


