News April 24, 2024
பக்தர்கள் செல்ல தடை

சேலம் மாவட்டம், கஞ்சமலை மேல் சித்தர் கோயில் கஞ்சமலை கோயிலுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியில் பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மர்ம நபர்கள் மலை உச்சியில் தீ வைத்ததால் தீ பரவி வருவதையொட்டி பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
Similar News
News January 14, 2026
சேலம்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்!

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <
News January 14, 2026
சேலமே அதிரப்போகுது! நீங்க ரெடியா?

சேலம் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜன.15, 16 ஆகிய தேதிகளில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் “சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடைபெற உள்ளது. மாலை 5.30 மணி முதல் கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இந்த விழாவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
CRIME TIME: ஏற்காட்டில் முறையற்ற உறவால் நடந்த விபரீதம்!

ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதியில் சாலா(33) என்ற பெண் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த வழக்கில் இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் முறையற்ற உறவில் இருவரும் இருந்து வந்த நிலையில் பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இந்தநிலையில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


