News April 24, 2024
நெல்லையில் தேதி அறிவிப்பு

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நெல்லை பிரிவு சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் சீவலப்பேரி ரோடு நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 2ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1770. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் – 74017035 06 என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 30, 2026
JUST IN நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

தைப்பூச பண்டிகை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இன்று(ஜன.30) இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. நாளை காலை 11:15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் பிப்.1 அன்று இரவு 10:35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
News January 30, 2026
நெல்லை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். நெல்லை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 30, 2026
நெல்லை: ஜவுளி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

வள்ளியூர் அருகே புதூரைச் சேர்ந்த அரவிந்தன்(28) ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அவரது நண்பர்களான டேவிட்(20), பொன்ராஜ்(25) ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை புதூரில் அரவிந்தன் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த டேவிட், பொன்ராஜ் ஆகியோர் அரவிந்தனை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


