News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 18, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – வங்கி மேலாளர் கைது!

image

பொம்மாடி மலைப் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (33). இவர் புதுகையில் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமாரி இதுகுறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி கீரனூர் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தினேஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

News March 18, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $9 உயர்ந்து $5,005-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் $1 குறைந்து $79-ஆக உள்ளது. சென்னையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹480 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

News March 18, 2026

2-ம் கட்ட வேட்பாளர்கள் தேர்வில் தவெக தீவிரம்

image

சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலையில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே முதற்கட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணலை விஜய் முடித்த நிலையில், 60 வேட்பாளர்கள் அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்தாக 2-ம் கட்ட நேர்காணல் நேற்று நடத்து முடிந்ததையடுத்து அடுத்த பட்டியலை தேர்வு செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது.

error: Content is protected !!