News April 24, 2024
₹50 லட்சம் நன்கொடை வழங்கிய சிவகார்த்திகேயன்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ₹50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். பணப் பிரச்னையால் தடைபட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடப் பணி நேற்றுப் பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து முன்னணி நடிகர்கள் பலரும், நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நன்கொடை வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
Similar News
News January 7, 2026
ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம்!

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பதிவு செய்தவர்கள் ஒரு இடத்தில் மட்டுமே பங்கேற்க முடியும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் டோக்கன் தரப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்புவர்கள் இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை <
News January 7, 2026
எந்த உணவில், என்ன சத்து?

✦வைட்டமின் A- கேரட், கல்லீரல் ✦B1- தானியங்கள், பருப்புகள் ✦B2- பால், முட்டை ✦B3- சிக்கன், வேர்க்கடலை ✦B5- அவகாடோ, முட்டை ✦B6- வாழைப்பழம், சால்மன், உருளை ✦B7- முட்டை, பாதாம் ✦B9- பச்சை காய்கறிகள், பயறு, சிட்ரஸ் ✦B12- மீன், இறைச்சி, பால் பொருள்கள் ✦வைட்டமின் D- மீன், பால். ✦வைட்டமின் K- காலே, ப்ரக்கோலி, சோயாபீன்ஸ் ✦வைட்டமின் E- சூரியகாந்தி விதைகள், பாதாம் ✦வைட்டமின் C- ஆரஞ்சு, கொய்யா. SHARE.
News January 7, 2026
பொங்கல் விடுமுறை.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக 34,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. ஜன. 9 – 14 வரை சென்னையில் இருந்து 22,797, பிற ஊர்களிலிருந்து 11,290 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ள நிலையில், பயணத்தை திட்டமிட்டோர் இங்கே <


