News April 24, 2024
வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு வேண்டுகோள்

மூச்சுத் திணறல், இதயப் பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வர வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சிவ பக்தர்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில், கோடை வெயில் தாங்காமல் பக்தர்கள் சிலர் உயிரிழக்கும் சூழல் உருவாகிறது. இதனைத் தவிர்க்க, முதியோர், உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள், கோடை வெயில் முடியும் வரை மலையேற வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News January 11, 2026
ராமநாதபுரம்: 17 வயிறு சிறுவன் மீது போக்சோ

திருவாடானை அருகே 14 வயது சிறுமி, 17 வயது சிறுவன் இருவரும் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வரும் நிலையில் சிறுவன் சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளான். இருவரும் பல தடவை தனிமையிலும் இருந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி உள்ளார். சிறுமியின் பெற்றோர் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்
News January 11, 2026
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

புதுச்சேரி பாகூர் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் 5 பேர், 9-ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவியை காதலித்த 17 வயது சிறுவன் பாகூர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே இருந்த 4 சிறுவர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
News January 11, 2026
PSLV C-62 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 10.17 மணிக்கு, PSLV C-62 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. DRDO சேவைக்காக வடிவமைக்கப்பட்ட EOS N1 செயற்கைக்கோளுடன், பல்வேறு நாடுகளை சேர்ந்த 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்நிலையில் ராக்கெட், செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக ISRO தெரிவித்துள்ளது.


