News November 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ. 21 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.3200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6105 ஆகவும் பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.20080 ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆக விருதுநகர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.5900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News March 4, 2026
விருதுநகர் : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

விருதுநகர் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <
News March 4, 2026
விருதுநகர்: சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு; ஒருவர் கைது

ஆலங்குளம் செல்லும் சாலையில் உள்ள கிளியம்பட்டி பகுதியில் மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வசித்து வரும் கருப்பசாமி என்பவர் தனது கார் செட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களையும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.


