News April 24, 2024
சீனாவை முந்தியது இந்தியா

மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. கடந்த ஆண்டு 5.8 இலட்சத்திற்கும் அதிகமான மூன்று சக்கர மின்சார வாகனங்களை இந்தியா விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 65% அதிகம். அதே நேரம், சீனாவில் 8% விற்பனை சரிந்து 3.2 இலட்சம் வாகனங்களே விற்பனையாகியுள்ளது. மின்சார வாகனங்களுக்கு அரசு அளித்த மானியம் விற்பனையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 12, 2026
யாருடன் கூட்டணி? மௌனம் கலைத்தார் ராமதாஸ்

அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை பாஜக, திமுக, அதிமுக என எந்த கட்சியும் தன்னிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்பது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.12) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹220 உயர்ந்து ₹13,120-க்கும், சவரன் ₹1,760 உயர்ந்து, ₹104,960-க்கும் விற்பனையாகிறது. <<18832722>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் TN சிறப்பாக இருக்கும்: பிரவீன்

மற்ற மாநிலங்கள் காங்., உடன் கூட்டணி ஆட்சியை ஏற்கும்போது, TN-ல் மட்டும் அந்த மனநிலை இல்லாதது ஏன் என பிரவீன் சக்கரவர்த்தி கேட்டுள்ளார். 60 ஆண்டுகளாக TN-ல் காங்., பலவீனமடைந்துவிட்டதாக கூறிய அவர், அதை பலப்படுத்த சில கோரிக்கைகளை வைப்பதில் தவறில்லை என்றும் கூறினார். மேலும், கூட்டணி ஆட்சியாக இருந்திருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதார சூழ்நிலை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


