News April 24, 2024
வெளியேறினார் ஆஸ்திரேலிய செய்தியாளர்

மோடி அரசு தரும் நெருக்கடிகளால் இந்திய நாட்டில் இருந்து வெளியேறுவதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் அவனி தெரிவித்துள்ளார். அந்நாட்டு வானொலிக்காக டெல்லியில் தங்கிப் பணியாற்றி வந்த அவனி தியாஸ், X தளத்தில் குற்றச் சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று கூறிக்கொள்ளும் மோடி அரசு, தேர்தலுக்கு முன் தன்னை இந்தியாவில் இருந்து வெளியேறச் செய்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 30, 2026
EPFO: கட்டாயச் சம்பள உச்சவரம்பு ₹25,000?

ஊழியர்களின் EPFO கணக்கிற்கு பங்களிக்கப்படும் கட்டாயச் சம்பள உச்சவரம்பு ₹15,000-லிருந்து ₹25,000-ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2014-ல் இந்த வரம்பு ₹6,500-லிருந்து ₹15,000-ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், தனியார் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.
News January 30, 2026
ரஷ்யா செல்கிறாரா ஜெலன்ஸ்கி?

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மீண்டும் மாஸ்கோவிற்கு அழைத்துள்ளது. இருப்பினும், அவரிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் ரஷ்யா விடுத்த அழைப்பை ஜெலன்ஸ்கி நிராகரித்திருந்தார். மேலும், தனது நாட்டின் மீது ஏவுகணைகளை வீசும் நாட்டிற்கு தான் செல்லமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
News January 30, 2026
ராசி பலன்கள் (30.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


