News April 24, 2024

பேருந்துகளில் தானியங்கிக் கதவு பொருத்த உத்தரவு

image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், எத்தனை பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? என்ற தகவலைத் தெரிவிக்க உள்துறை, போக்குவரத்துத் துறைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

சர்ச்சையில் சிக்கிய BRICS-ன் புதிய லோகோ!

image

பிரிக்ஸ் 2026 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிலையில் அதற்கான புதிய லோகோ மற்றும் இணையதளத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார். மேலும் இந்தாண்டு தலைமையேற்றுள்ள இந்தியா, மனிதநேயமே முதன்மை & மக்கள் மைய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என தெரிவித்துள்ளது. எனினும் 2016-ம் ஆண்டு வெளியான BRICS லோகோவுடன் ஒப்பிட்டு, பெரிய மாற்றங்கள் செய்யாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News January 13, 2026

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

image

கூடுதல் மகிழ்ச்சி அறிவிப்பாக <<18841026>>நாளை<<>> (ஜன.14) முதலே பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் வகுப்புகள் முடிவடைந்து விடுமுறை கொண்டாட்டத்தை மாணவர்கள் இப்போதே தொடங்கிவிட்டனர். 5 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கும், தாத்தா பாட்டி வீடுகளுக்கும் புறப்பட்டுவிட்டனர். இதனால் சாலைகள் திக்குமுக்காடுகின்றன. நீங்க பொங்கல் விடுமுறைக்கு தயாராகி விட்டீர்களா?

News January 13, 2026

இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

image

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

error: Content is protected !!