News April 24, 2024
மோடி ஆட்சியில் அரசியல் சிந்தனையே மாறிவிட்டது

பிரதமர் மோடியின் ஆட்சியில், அரசியலின் இலக்கணம், சிந்தனை, நாகரிகம் ஆகியன மாறி விட்டதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் எடுத்த முடிவின் விளைவாக ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது என்றார். சீன பொம்மைகளை வாங்கி வந்த இந்தியா, தற்போது பொம்மை ஏற்றுமதியில் 3ஆவது இடம் பிடித்துள்ளதாகக் கூறினார்.
Similar News
News January 12, 2026
விஜய்யிடம் விசாரணை நிறைவு

டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் நடத்தப்பட்ட முதல் நாள் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. 4 அதிகாரிகள் விஜய்யிடம் தனித்தனியாக சுமார் 4.15 நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கரூரில் மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பரப்புரையை நிறுத்தவில்லை, கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன் என்பன உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விஜய் விளக்கமளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 12, 2026
தங்கம் விலை மொத்தம் ₹4,160 உயர்ந்தது

சர்வதேச சந்தை எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஜன.3-ம் தேதி சவரனுக்கு ₹1,00,800-ஆக இருந்த தங்கம் விலை இன்று ₹1,04,960-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9 நாளில் மட்டும் சுமார் ₹4,160 அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை சுமார் ₹30,000 உயர்ந்துள்ளது.
News January 12, 2026
மனித கறி கேட்டு ஓட்டலை சூறையாடிய மதுபிரியர்கள்!

ஓட்டலில் ஒட்டக கறி கேட்டு பார்த்திருப்போம். ஆனால் மனித கறி கேட்டு இளைஞர்கள் ஓட்டலையே சூறையாடிய சம்பவம் பலரையும் பதற வைத்துள்ளது. கடலூரின் பெண்ணாடம் அருகே உள்ள ஓட்டலுக்கு 7 இளைஞர்கள் மதுபோதையில் சென்றுள்ளனர். அவர்கள் சாப்பிட மனித கறி வேண்டும் என கேட்டதும், ஷாக் ஆன மாஸ்டர் ’அதெல்லாம் இல்லை’ என கூற, ஆத்திரமான 7 பேரும் அவரை தாக்கி ஓட்டலையும் சூறையாடினர். இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைதாகியுள்ளனர்.


