News April 24, 2024
சிறப்பு இரயில் இயக்கம்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மெமு சிறப்பு ரயில், ஏப்.23ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தி.மலையை சென்றடையும். தி.மலை-சென்னை கடற்கரை மெமு சிறப்பு ரயில் தி.மலையில் இருந்து ஏப்.24ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதேநாளில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
தி.மலை: தீபத்தன்று மலையேற அனுமதி உண்டா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது என்று ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கார்த்தை தீபத் திருநாளன்று மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த பின்னரே மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கார்த்தை தீபத் திருநாளை ஓட்டி முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
News November 19, 2025
தி.மலை: தலை நசுங்கி இளைஞர் பலி!

ஆரணி வட்டம், அரியப்பாடி, ஆரணி- சிறுமூர் சாலை பகுதியில், தனியார் பேருந்து ஒன்று சிறுமூர் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்ராபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (16) என்பவர் ஒட்டி வந்த பைக், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News November 19, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


