News November 19, 2025

ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

image

ஈரோடு மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News March 5, 2026

கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு!

image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட திமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, நம்பியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி என்.சி.சண்முகம், தனது ஆதரவாளர்களுடன் சென்று விருப்பமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து நம்பியூரைச் சேர்ந்த மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் விருப்பமனு அளித்துள்ளதால், கோபி தொகுதியில் திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

News March 5, 2026

ஈரோடு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 5, 2026

ஈரோடு அருகே பதறவைக்கும் துயரம்!

image

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!