News November 19, 2025
திருப்பூர்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

திருப்பூர் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News March 24, 2026
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை.. ஏன் தெரியுமா?

திருப்பூர் ஓடக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர், பனியன் துணியிலிருந்து நூலைப் பிரிக்கும் இயந்திரம் விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கத் தாமதமானதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: யாரும் வரவேண்டாம்..! பேனரால் பரபரப்பு

திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு ஜனசக்தி நகர் மக்கள், நில உரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவாததைக் கண்டித்து, 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். “ஓட்டுக் கேட்க யாரும் வரவேண்டாம்” என அவர்கள் வைத்துள்ள பேனர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.